Get all important updates, notices, and announcements in one place. Stay informed about events, academic schedules, deadlines, and other essential information to ensure you never miss out.
September 16, 2024
சென்னையில் எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் மாபெரும் ஊர்வலம்
சென்னை திருவேற்காடு எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊட்டச்சத்துத் துறையும் நாட்டு நலப் பணித்திட்டமும் உன்னத் பாரத் அபியானும் இணைந்து 14 .9 .24 அன்று காலை 9.30 மணி அளவில் பூந்தமல்லி தாலுகாவில் உள்ள கண்ணபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம்
கிராமங்களில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி ஊட்டச்சத்து மற்றும் உணவு சார் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. கல்லூரியின் தாளாளர் திரு.ப.வெங்கடேஷ் ராஜா மற்றும் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கல்லூரியின் முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோர்களின் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த விளம்பரப்
பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டு ஊர்வலமாக நடந்து சென்று விழிப்புணர்வை ஊட்டினர். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கண்ணபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஆதி கேசவன், மாமன்ற உறுப்பினர் திரு பகவதி கண்ணன் மற்றும் திரு முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு கிராமங்களிலும் பொதுமக்கள் மாணவர்களின் ஊர்வலத்தில் வெளியிட்ட விழிப்புணர்வு வாசகங்களைக் கண்டு உடல் நலம் காக்கும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாட்டை கல்லூரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.