தமிழ்மொழி மற்றும் அதன் இலக்கிய வளத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் மொழிப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை தமிழ்த்துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்த்துறையில் பொதுத்தமிழ், அடிப்படைத் தமிழ், சிறப்புத் தமிழ் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பாடத்திட்டம் சார்ந்த கல்வியை மட்டும் வழங்காமல் மாணவர்களின் ஆளுமைத் திறனையும், கலைத்திறனையும், படைப்பாக்கத் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் தமிழ்த்துறை நடத்தி வருகிறது.
பாடத்திட்டம் சார்ந்து தமிழர் நாகரிகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடையாளப்படுத்துதல். இளநிலைக் கல்வி பெறும் முதல் தலைமுறை மாண வர்களை ஊக்குவித்தல். மாணவர்களின் ஆளுமைத் திறனையும், படைப்பாக்கத் திறனையும் உயர்த்தும் வண்ணம் பயிற்சிகளை வழங்குதல்.
மாணவர்களின் படைப்பாக்கத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல். தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆ ர்வமுடன் கற்க மாணவர்களைத் தூண்டுதல். இலக்கணப் பிழையின்றித் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் கற்பித்தல். மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்தப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
மாணவர்கள் தமிழில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் படைப்பாக்கத் திறனை உருவாக்கும் வண்ணத்திலும் பாடத்திட்டங்கள் முப்பரிமாண ஊடக வழி கற்பிக்கப்படுகின்றன. போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சாதிக்கத் தூண்டும் வகையில் புத்தகங்கள் பயிற்சித் திட்டங்கள் ஊடாக வழி காட்டப்படுகின்றது.