Get all important updates, notices, and announcements in one place. Stay informed about events, academic schedules, deadlines, and other essential information to ensure you never miss out.
July 30, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி ஜூலை 28, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் அருமையாகப் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் நடிப்பின் மூலமாக அவர்களின் திறன்களை வெளிப்படுத்தினர். இதில் மரபால் மலர்வோம் மாணவர் திறன் வளர் நிகழ்வு -1 என்ற தலைப்பில், பிழையின்றி மேடையில் தமிழ் பேசுதல் போட்டி மற்றும் மௌன மொழிப் போட்டியில் மாணவர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மேடையில் தைரியமாக பேசுவதற்காகவும் இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.