Registrations Open for Admissions 2025 - 2026Admission office will be open on all the Days including Sundays and Holidays
Banner Image

SA Events

Get all important updates, notices, and announcements in one place. Stay informed about events, academic schedules, deadlines, and other essential information to ensure you never miss out.

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு பிப்ரவரி 12.02.2025

February 13, 2025

*எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு*

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை, தமிழ்த்துறை மற்றும் இந்திய அறிவு அமைப்பு ஆகியவை இணைந்து ‘புத்தகம் வாசிப்பும் நேசிப்பும்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை பிப்ரவரி 12,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. ஆரோக்கியமான புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கும்,  புதியனவற்றைக் கற்றுக் கொள்வதற்கும்,  புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தேவை நல்லதொரு புத்தக வாசிப்புப் பயிற்சி.  இத்தகைய நல்ல நூல்களைத் தேடிப் படித்து,  மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு  இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் நூலகரும்,  நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மேனாள் துறைத்தலைவருமான முனைவர் ந. முருகேச பாண்டியன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. க.  வீரராகவன் விழாவுக்கு வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.‌ தமிழத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஈ.  இசக்கியம்மாள் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.‌ 

     தொடர்ந்து கற்றல் என்பது நம்மை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியது;  இன்பம் பயக்கக்கூடியது;  சமூகத்தில் நம்மை நிலைநிறுத்தக்கக் கூடியது என்பதனை பல இலக்கியச் சான்றுகளையும்,  பல நூல்களையும் எடுத்துரைத்துப் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை சிறப்பு விருந்தினர்  வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா. விக்னேஷ் குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ.  விஜயலட்சுமி அவர்களின் தொகுப்புரையுடன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. க.  வீரராகவன் மற்றும் ம. ரம்யா ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.