SACAS-முத்தமிழ்ப் பொங்கல் விழா-11.01.2024 மற்றும் 12.01.2024
January 9, 2024
|By SacasEditor
SACAS-முத்தமிழ்ப் பொங்கல் விழா
முத்தமிழ்ப் பொங்கல் விழா 11.01.2024 மற்றும் 12. 01.2024 ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ளது. 11.01.2024 அன்று முற்பகல் 11 மணிக்குப் பட்டிமன்றப் பேச்சாளரும், புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் சந்தானகிருஷ்ணன் அவர்களை நடுவராகக் கொண்டு “தமிழரின் நாகரிகம் பண்பாடு இன்றைய நிலையில் வளர்கிறதா? தளர்கிறதா? ” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. ‘வளர்கிறது!’ என்ற அணிக்குக் கவிஞர் அரக்கோணம் ஜெயஸ்ரீ அவர்களும், ‘தளர்கிறது!’ என்ற அணிக்குப் பேராசிரியர் ஆவடி சரளா அவர்களும் தலைமை ஏற்கின்றனர். அன்று பிற்பகல் 1:30 மணிக்குத்
தேவகோட்டை ராஜன் குழுவினர் வழங்கும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெறும்.
இரண்டாம் நாள் நிகழ்வாக 12. 01.2024 அன்று
காலை 9 மணிக்கு இசை முருகன் கலைக்குழு வழங்கும் பறை இசையும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கயிறு இழுக்கும் போட்டி, உறியடி போன்ற நாட்டுப்புற விளையாட்டுகளும் நடைபெறும். சிறப்பு விருந்தினராகத் ‘தொலைக்காட்சி’ புகழ் தொகுப்பாளினி ஆர்த்தி அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பிக்கிறார்.

