Anti-Human Trafficking

எஸ் . கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக 20 .7 .2023 அன்று காலை 11:30 மணியிலிருந்து 1 மணி வரையிலும் Anti-Human Trafficking விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று நாட்டு நலப் பணித்திட்ட  மாணவி ஜெயஸ்ரீ வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் திரு ஹரிகரன் அவர்களும் திருமதி பிரவீணா சாலமன் அவர்களும்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். மனிதக் கடத்தலைத் தடுப்பது பற்றியும் குழந்தைத் தொழிலாளரை மீட்பதைப் பற்றியும் காணொளிக் காட்சி மூலமாகவும் மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கினர். குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான அரசின் இலவசத் தொலைபேசி எண்ணையும் மாணவர்களுக்கு வழங்கினர்.

 

நிகழ்ச்சியின் நிறைவில். மனிதக் கடத்தல் தடுப்பு பற்றிய உறுதிமொழி வாசகத்தினை சிறப்பு விருந்தினர்கள் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா நிறைவில் இவ்விழாவிற்கு அனுமதி அளித்த கல்லூரியின் தாளாளர் திரு பி.வெங்கடேஷ் ராஜா அவர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி கூறித் தன் இனிய நன்றியுரை  வழங்கினார் நாட்டு நலப் பணித்திட்ட மாணவத் தலைவர் செல்வன் அகிலன்.

 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களைச் சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டப் பொறுப்பாளர் திரு மா .விஜயகுமார் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.