தமிழ்த் துறை சார்பில் மாணவர்களுக்கு முப்பரிமாண கற்றல் வகுப்பு 16.10.2023

எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் மாணவர்களுக்கு முப்பரிமாண கற்றல் வகுப்பு இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரித் திரையரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. 16,17.10.2023 இரு நாட்கள்இப்பயிலரங்கு நடைபெற உள்ளது. 

 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வழிகாட்டும் வகையில் பாடப் பகுதிகளை ஒலி ஒளிக் காட்சியுடன் மாணவர்களுக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்திக் கற்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்