*எஸ்.ஏ.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழா*

*எஸ்.ஏ.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழா*

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கவிஞர் திரு. யோ.சா. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார், இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி ஆகியோரின் சீரிய தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி,  அன்னைத் தமிழின் சிறப்புகளைக் காட்சிப்படுத்திக் கவிதை வாசித்தார்.‌ சிறப்பு விருந்தினர் கவிஞர் திரு . யோ.சா. இராஜேந்திரன் அவர்கள் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கத்தையும், தமிழ் மொழியின் சிறப்புகளை  இலக்கியக் காட்சிகளின்  வாயிலாகவும் அழகுற எடுத்துரைத்தார். உலக  தாய்மொழி தினத்தன்று நாம் அனைவரும் அவரவர் தாய்மொழியை நினைவு கூறும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.