எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு – கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு – கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா

சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பாகத் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு – கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா 22.8.2023 அன்று காலை 9.30 மணிக்குக் கல்லூரித் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவரும் 160 அறிவியல் நூல்களைப் படைத்த உலகின் முதல் இந்திய விஞ்ஞானியுமான திரு. நெல்லை சு முத்து அவர்களும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநர் முனைவர் உலகநாயகி பழனி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் மனதில் இருத்தும் வண்ணம் முத்தான சிந்தனைகள் பலவற்றை எடுத்துரைத்தனர்.‌ பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, ஒட்டுப்பட வண்ணக் கலவைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பொற்கிழிப் பரிசும் வழங்கப்பட்டன. கல்லூரித் தாளாளர் திரு.‌ P. வெங்கடேஷ் ராஜா, கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.