இந்தியா 2047 இளையோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் 20.09.2023

எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பில் கல்லூரி திரையரங்கில் இந்தியா 2047 இளையோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் இன்று 20.09.2023 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் திருவள்ளூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அதிகாரி திரு நம்மல கிருஷ்ணா அவர்கள் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில் ஆளுமை பயிற்சி பயிற்றுநர் திரு கரண்ட் கார்த்திக் அவர்கள் ஆளுமை பயிற்சியினை நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட முன்னாள் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி திரு செந்தில் அவர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நேரு யுவகேந்திர அலுவலர் திருமதி மீனாட்சி சுந்தரி அவர்கள் நன்றி உரை வழங்கினார். விழாவிற்கான வழிகாட்டுதலை கல்லூரியின் தாளாளர் திரு.P. வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் இயக்குனர் சாய் சத்யவதி அவர்களும் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான நெறிமுறைகளைக்கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்கள் வழங்கினார். விழா நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் திரு. விஜயகுமார் நன்றி உரை வழங்கினார் .