No Screen Time Walkathon Awareness Department of Psychology and the NSS Students on 29.06.2024

*No Screen Time Walkathon raises Autism Awareness*

Students from the Department of Psychology and the NSS unit of S.A. College of Arts & Science collaborated with the Aron Foundation to organize a event named the "No Screen Time Walkathon Awareness." This event,  aimed to raise awareness about autism and the importance of reducing screening time for autism in children.


எஸ். ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஜி.என.சிஎன்விரோ கிளப் மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியில் 08.06.2024 சனிக்கிழமை

சென்னை திருவேற்காடு எஸ். ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஜி.என.சிஎன்விரோ கிளப் மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியில் 8 .6 .2024 சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை கடற்கரையைச் சுத்தம் செய்து அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் நெகிழிப்பைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்து அகற்றினர். கடற்கரை பகுதியைச் சுத்தமாக்கிச் சுற்றுச்சூழலை ப் பாதுகாக்கும வண்ணம் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 50 பேர் இதில் கலந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அறப்பணியில் ஈடுபட்டனர். இம்மாணவர்களைக் கல்லூரியின் தாளாளர் திரு.P.வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்களும் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் பாராட்டினர். விழா நிகழ்ச்சியின் நிறைவில்  ஓசன் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் ஜிஎன்.சி என்விரோ கிளப்பின் சார்பாகவும் மாணவர்களுக்குச்

சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயலாற்ற வேண்டிய பணிகளைக் குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித் திட்டத் அலுவலர் திரு.எம். விஜயகுமார் நன்றி உரை வழங்கினார்.


எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 மாணவர் பங்கேற்ற குழந்தைத் திருமணத் தடுப்பு மனிதச் சங்கிலி 18.10.2023

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 மாணவர் பங்கேற்ற குழந்தைத் திருமணத் தடுப்பு மனிதச் சங்கிலி

எஸ் .ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ICWO சார்பில் குழந்தைத் திருமணமற்ற இந்தியா
மனிச் சங்கிலியும் 1000 மாணவர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் இன்று18.10.2023 கல்லூரி வளாகத்தில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் டாக்டர் பி. எம் நாயர்IPS
மனிதக் கடத்தல் தடுப்பு பன்னாட்டு நிபுணர்.


இந்தியா 2047 இளையோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் 20.09.2023

எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பில் கல்லூரி திரையரங்கில் இந்தியா 2047 இளையோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் இன்று 20.09.2023 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் திருவள்ளூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அதிகாரி திரு நம்மல கிருஷ்ணா அவர்கள் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில் ஆளுமை பயிற்சி பயிற்றுநர் திரு கரண்ட் கார்த்திக் அவர்கள் ஆளுமை பயிற்சியினை நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட முன்னாள் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி திரு செந்தில் அவர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நேரு யுவகேந்திர அலுவலர் திருமதி மீனாட்சி சுந்தரி அவர்கள் நன்றி உரை வழங்கினார். விழாவிற்கான வழிகாட்டுதலை கல்லூரியின் தாளாளர் திரு.P. வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் இயக்குனர் சாய் சத்யவதி அவர்களும் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான நெறிமுறைகளைக்கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்கள் வழங்கினார். விழா நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் திரு. விஜயகுமார் நன்றி உரை வழங்கினார் .


Anti-Human Trafficking

எஸ் . கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக 20 .7 .2023 அன்று காலை 11:30 மணியிலிருந்து 1 மணி வரையிலும் Anti-Human Trafficking விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று நாட்டு நலப் பணித்திட்ட  மாணவி ஜெயஸ்ரீ வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் திரு ஹரிகரன் அவர்களும் திருமதி பிரவீணா சாலமன் அவர்களும்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். மனிதக் கடத்தலைத் தடுப்பது பற்றியும் குழந்தைத் தொழிலாளரை மீட்பதைப் பற்றியும் காணொளிக் காட்சி மூலமாகவும் மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கினர். குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான அரசின் இலவசத் தொலைபேசி எண்ணையும் மாணவர்களுக்கு வழங்கினர்.

 

நிகழ்ச்சியின் நிறைவில். மனிதக் கடத்தல் தடுப்பு பற்றிய உறுதிமொழி வாசகத்தினை சிறப்பு விருந்தினர்கள் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா நிறைவில் இவ்விழாவிற்கு அனுமதி அளித்த கல்லூரியின் தாளாளர் திரு பி.வெங்கடேஷ் ராஜா அவர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி கூறித் தன் இனிய நன்றியுரை  வழங்கினார் நாட்டு நலப் பணித்திட்ட மாணவத் தலைவர் செல்வன் அகிலன்.

 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களைச் சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டப் பொறுப்பாளர் திரு மா .விஜயகுமார் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


District-Level Youth Parliament in collaboration with Nehru Yuva Kendra, Ministry of Youth Welfare and Sports

On March 17, 2023, our college NSS unit hosted a District-Level Youth Parliament in collaboration with Nehru Yuva Kendra, Ministry of Youth Welfare and Sports, Tiruvallur, to foster leadership and eco-friendly practises among the youth. Mr. H. M. Nasser, the Hon’ble Minister of Dairy Resources, graced the function with his presence and delivered the keynote speech.