எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், நூலகத்துறையும் இணைந்து புத்தகம் பேசுது எனும் தலைப்பில் நிகழ்ச்சி 29.08.2024

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், நூலகத்துறையும் இணைந்து வருகின்ற 29.8.2024 அன்று புத்தகம் பேசுது எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளோம், இந்நிகழ்வில் மாணவ மாணவியர்கள் பாரதிதாசன், பாரதியார் எழுதிய கவிதைகளில் இயற்கை, கல்வி, மொழிப்பற்று, காதல், பெண்ணியம்.. போன்ற தலைப்புகளில் தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பினைத் தேர்ந்தெடுத்து அக்கவிதை குறிப்பிடும் செய்திகளோடு தங்களது விமர்சனங்களையும் சேர்த்து கருத்துரை வழங்கலாம். மாணவ மாணவியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு தங்களது பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவும்.