எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 7.1.2025 அன்று நடைபெற்றது.

எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பட்டிமன்றம்.

திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பிலும் காட்சித் தொடர்பியல் துறை சார்பிலும் ஜெம் டிவியோடு இணைந்து மாபெரும் பொங்கல் சிரிப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 7.1.2025 அன்று நடைபெற்றது.

தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் திரு பாகை கண்ணதாசன் அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்றுப் பண்பாட்டைக் கட்டிக் காப்பது கிராமமா?நகரமா? என்னும் தலைப்பிலான பட்டிமன்றத்திற்குச்

சுவை கூட்டினார். இரு அணிகளும் பிரபல தொலைக்காட்சிப் பேச்சாளர்கள் பேராசிரியர் அன்பு கவிஞர் நித்தியப் பிரியா திரு தேவகோட்டை லட்சுமி நாராயணன் திரு. டோக்கியோ ராமநாதன் திருமதி கல்பனா தர்மேந்திரா செல்வி சாகித்யா ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

சிரிப்பும் சிந்தனையும் நிறைந்த இப் பட்டிமன்றத்தைக் கல்லூரி மாணவர்கள் வெகுவாக ரசித்தனர் இந்த நிகழ்ச்சிக்குக் கல்லூரியினுடைய தாளாளர் திரு ப.வெங்கடேஷ் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் கல்லூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் அவர்களும்  இப் பட்டிமன்றத்திற்கு வருகை தந்தோரை வரவேற்றனர்.   கல்லூரியின் சார்பாகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்.