எஸ். ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஜி.என.சிஎன்விரோ கிளப் மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியில் 08.06.2024 சனிக்கிழமை

சென்னை திருவேற்காடு எஸ். ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஜி.என.சிஎன்விரோ கிளப் மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியில் 8 .6 .2024 சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை கடற்கரையைச் சுத்தம் செய்து அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் நெகிழிப்பைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்து அகற்றினர். கடற்கரை பகுதியைச் சுத்தமாக்கிச் சுற்றுச்சூழலை ப் பாதுகாக்கும வண்ணம் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 50 பேர் இதில் கலந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அறப்பணியில் ஈடுபட்டனர். இம்மாணவர்களைக் கல்லூரியின் தாளாளர் திரு.P.வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் அவர்களும் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்களும் பாராட்டினர். விழா நிகழ்ச்சியின் நிறைவில்  ஓசன் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் ஜிஎன்.சி என்விரோ கிளப்பின் சார்பாகவும் மாணவர்களுக்குச்

சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயலாற்ற வேண்டிய பணிகளைக் குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித் திட்டத் அலுவலர் திரு.எம். விஜயகுமார் நன்றி உரை வழங்கினார்.